வலங்கைமான் பகுதியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

வலங்கைமான். செப்.19: வலங்கைமான் தாலுகாவில் உள்ள கால்நடைகளுக்கு 15வது சுற்று கோமாரிநோய் தடுப்பூசி போடும் முகாம் 5 குழுக்களாக கடந்த 1ம் தேதி முதல்  வரும் 21ம் தேதி வரை நடைபெறுகின்றது.    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் உள்ள 50 கிராம ஊராட்சிகளில் சுமார் 16 ஆயிரம் மாடுகள் உள்ளன. இவைகளுக்கு 15வது சுற்று கோமாரிநோய் தடுப்பூசி போடும் முகாம் கால்நடை உதவி மருத்துவர்கள், 2 கால்நடை ஆய்வாளர்கள் தலைமையில், கால்நடை உதவியாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய 5  குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் குக்கிராமங்கள் வாரியாக கால்நடைகளுக்கு பொது இடத்தில் வைத்து  கோமாரி தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இம்முகாமானது கடந்த 1ம் தேதி முதல் தொடங்கி 21ம் தேதி வரை நடைபெறுகின்றது. நேற்று முன்தினம் சித்தன்வாளுர் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட  கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.

Related Stories: