ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கால்நடைகளால் விபத்துகள் அதிகரிப்பு

ஆர்.எஸ்.மங்கலம், செப். 19:  ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கால்நடைகளால் அதிகமான விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனால் வாகன ஒட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை ஆகிய தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் ஆடு, மாடு, நாய் போன்றவற்றால் ஏராளமான விபத்துக்கள் நடைபெறுகிறது. இதனால் உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்படுகின்றது. ஆடு, மாடுகளை வளர்பவர்கள் அதனை சரியாக பராமரித்து வீடுகளில் கட்டாமல் விட்டு விடுகின்றனர். இவைகள் இரவு, பகல் எந்த நேரத்திலும் ரோடுகளில் படுத்து இருப்பதும், குறுக்கும் நெடுக்காக ஓடுவதாலும் டூவீலர்களில் வருபவர்கள் ஏராளமானோர் விபத்தில் சிக்கி வருகின்றனர்.

கால்நடைகள் சாலைகளில் ஓடியதால் நேற்று கூட ஆர்.எஸ்.மங்கலம் அருகே அரியான் கோட்டை என்ற இடத்தில், இளையான்குடி தருகம்பல் கிராமத்தை சேர்ந்த திருவாசகம் மகன் கரன்குமார் (21) டூவீலரில் சென்றபோது கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதுபோல பல விபத்துக்களில் கால், கைகளில் காயம் ஏற்பட்டு ஏராளமான வாகன ஒட்டிகள் அல்லல்பட்டு வருகின்றனர். இதற்கு உள்ளாட்சிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுத்து வாகன விபத்துக்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: