குப்பை கொட்டியதற்கு ஆட்சேபம் விஏஓவை மிரட்டிய 4 பேர் மீது வழக்கு பதிவு

கரூர், செப்.18: குப்பை கொட்டியதற்கு ஆட்பேசம் தெரிவித்த விஏஓவை மிரட்டியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கரூர் ஆத்தூர் காந்திநகர் மேற்குபகுதியில் ரமேஷ், குழந்தைவேல், சுரேஷ், ராஜேந்திரன் ஆகியோர் குப்பையை லாரியில் கொண்டுவந்து கொட்டினர். இதனை ஆத்தூர் விஏஓ முருகேசன் தட்டிக்கேட்டார். இடத்தின் உரிமையாளரிடம் அனுமதி பெற்றுத்தான் கொட்டுகிறோம் என கூறி அவருக்கு மிரட்டல் விடுத்தனர். இதனையடுத்து வாங்கல் போலீசில் விஏஓ புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபாட்டில்கள் பறிமுதல்: கரூர் தெற்குகாந்தி கிராமத்தை அடுத்த இந்திரா நகரில் ஒருவீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையில் சோதனையில்

ஈடுபட்டனர். பழனிவேல் என்ற அசோக் என்பவர் பாண்டிச்சேரியில் இருந்து மதுபாட்டல்களை வாங்கி வந்து வீடு வாடகைக்கு எடுத்து விற்பனை செய்தது தெரியவந்தது. செல்போன் மூலம் ஆர்டர் எடுத்து அதிக விலைக்கு பதுக்கிய மதுபாட்டல்களை விற்பனை செய்து வந்த பழனிவேலை கைது செய்தனர். அவரிடம் இருந்து 52 மதுபான பாட்டல்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: