வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் : பொதுமக்கள் வேண்டுகோள்

பரமக்குடி, செப்.18:  பரமக்குடி வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லாததால் வியாபாரிகள், பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். ரமக்குடி நகர் பகுதியில் வாரந்தோறும் வியாழக் கிழமையில் சந்தை நடப்பது வழக்கம். மஞ்சூர், பாண்டி கண்மாய், பெருங்கரை உள்ளிட்ட சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான கிராம மக்கள் பலர் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்ற

னர். நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ளதால் ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து காய்கறிகள், பூக்கள், ஆடு, மாடு, நாட்டு கோழிகள் போன்றவற்றை வாங்கி செல்கின்றனர். வாரந்தோறும் அங்கு பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் காய்கறி கடைகளும் புதிது புதிதாக திறந்த வெளியில் அமைக்கப்பட்டு வருகிறது. வாரந்தோறும் ஆடு, மாடுகள் மட்டும் லட்சக்கணக்கில் அங்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் சந்தையில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி என எதுவும் இல்லை. இதனால்  சந்தைக்கு வரும் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் சந்தை வளாகம் முறையாக சுத்தம் செய்யப்படுவது இல்லை. இதனால் சந்தையில் துர்நாற்றம் வீசுகிறது. சம்மந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் பொதுமக்கள், கடை உரிமையாளர்களின் நலன் கருதி சந்தையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து குடும்பத் தலைவி சுபத்ரா கூறுகையில், சந்தையில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. வாரந்தோறும் பொதுமக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் அதிகாரிகள் குடிதண்ணீர் வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும்.

Related Stories: