தொண்டி, நம்புதாளை பள்ளிகளில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு உறுதி மொழி

தொண்டி, செப். 18: தொண்டி, நம்புதாளை மற்றும் சுற்றுவட்டார பள்ளிகளில் ஊட்டச்சத்து குறைபாடு குறித்து விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஊட்டசத்து குறைபாடு அற்ற மாநிலமாக மாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் அனைவருக்கும் ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் விதமாக நேற்று பள்ளிகள் முழுவதும் விழிபுணர்வு நிகழ்வு நடைபெற்றது.

தொண்டி கிழக்கு அரசு துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் லியோ ஜெரால்டு எமர்சன் தலைமையில் பள்ளியில் உறுதி மொழி ஏற்பும் பின்பு பள்ளி மாணவர்கள் மற்றும் தொண்டி பேரூராட்சி ஊழியர்கள் விழிப்புணர்வு பேரணியும் நடந்தது. பேரணியில் ஊட்டச்சத்து குறைபாடுகள் குறித்து மாணவர்கள் பதாகைகள் ஏந்தி சென்றனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணி நடைபெற்றது. நம்புதாளை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜான் தாமஸ் தலைமையில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் செய்யது யூசுப் முன்னிலையில் உறுதி மொழி ஏற்பு நடைபெற்றது.

ஆசிரியர் சகாயமதியரசு வரவேற்றார். ஆசிரியர் ரவி ஊட்டசத்து குறைபாடுகள் குறித்து பேசினார். ஆசிரியை மரியலீலா உறுதி மொழி வாசித்தார். ராமநாதன் நன்றி கூறினார்.இதில் ஜான்தாமஸ் பேசுகையில், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் மற்ற குழந்தைகள் போல் சுறுசுறுப்பாக இருக்கமாட்டார்கள். கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் போதிய ஊட்டசத்து எடுத்துக் கொள்ளாததால் சில குழந்தைகள் குறைபாடுகளுடன் பிறக்கிறது. சிறு குழந்தைகள் சத்துமிக்க உணவுபொருள்கள் அதிகம் உண்ணவேண்டும். ஆரோக்கியமான மக்களால் ஆனதே வலிமையான பாரதம் ஆகும் என்றார்.

தினைக்காத்தான்வயல் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் தலைம ஆசிரியை லதா தலைமையில் உறுதி மொழி ஏற்பு நடந்தது. சம்பை ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் தலைமை ஆசிரியை சகாயம் தலைமையில் கடம்பனேந்தல் ஆரம்ப பள்ளியில் தலைமை ஆசியை பிரமிளா தலைமையில், ஆசிரியை சகாய கில்டா முன்னிலையில் மாணவர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். எம்.ஆர்.பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மாணிக்கம் தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கடம்பூர் ஆரம்ப பள்ளியில் தலைமை ஆசிரியர் அந்தோணு அமலோற்பவதாஸ் தலைமையில், கட்டவிளாகம் ஆரம்ப பள்ளியில் தலைமை ஆசியர் சந்தனமேரி தலைமையில், வட்டாணம் ஆரம்ப பள்ளியில் தலைமை ஆசிரியை மரியபுஷ்பம் தலைமையில், கொடிபங்கு நடு நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் சகாயராஜ் தலைமையில் பட்டதாரி ஆசிரியர் முத்துராமன் முன்னிலையில் உறுதிமொழி ஏற்பட்டு நடைபெற்

றது.

Related Stories: