ஏர்வாடி தர்ஹா சார்பில் விநாயகர் சிலைக்கு மரியாதை

கீழக்கரை, செப்.18:  ஏர்வாடியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று கடலில் கரைத்தனர், மதநல்லிணக்கத்திற்கு எடுத்து காட்டாக ஏர்வாடி தர்ஹா சார்பில் விநாயகருக்கு மரியாதை செய்யப்பட்டது. ஏர்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட வெட்டமனை, தொத்தன்மகன் வாடி, நாச்சியம்மைபுரம், கல்பார், சின்ன ஏர்வாடி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 13ம் தேதி விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அனைத்து கிராமங்களிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று அந்தந்த கிராமத் தலைவர்கள் விநாயகர் ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். அனைத்து கிராம சிலைகளும் ஊர்வலமாக தர்ஹா வந்தடைந்தது. தர்ஹா ஹக்தார் பொது மகாசபை முன்னாள் தலைவர் துல்கருணை பாட்ஷா லெவ்வை மாலை கொடுத்து மரியாதை செலுத்தினார். பின்னார் சின்ன ஏர்வாடி வழியாக சென்று அனைத்து கிராம சிலைகளையும் கடலில் கரைத்தனர்.

Related Stories: