திமுக, காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம் துண்டுபிரசுரம் வழங்கினர்

ராமநாதபுரம், செப்.11: பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து அனைத்துக்கட்சிகள் சார்பில் நேற்று நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. ராமநாதபுரத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரண்மனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக  பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். திமுக நகர் செயலாளர் கார்மேகம்,   காங்கிரஸ் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன், அகில இந்திய காங்கிரஸ் கட்சி  உறுப்பினர்  செல்லதுரை அப்துல்லா,மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இன்பா ரகு,  முன்னாள்  நகர்மன்ற உறுப்பினர் அய்யனார்,  முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்  மனோகரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.நகர் தலைவர் கோபி, செய்தி தொடர்பாளர் கௌசி மகாலிங்கம், திருப்புல்லாணி வட்டார தலைவர் சேதுபாண்டியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் ராமநாதபுரம் நகரின் கடைவீதிகளில் ஊர்வலமாக சென்று துண்டுபிரசுரம் வழங்கினர். கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை. இதனால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டிருந்தன. பாம்பனிலும் டீசல் விலை உயர்வை கண்டித்து 2வது நாளாக மீனவர்கள்  வேலைநிறுத்தம் நடைபெற்றது. இதேபோல் மாவட்டத்தில் சில இடங்களில் ஆட்டோக்கள் இயங்கவில்லை. கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

Related Stories: