பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு

கடலூர், செப். 11: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் நேற்று நாடு முழுவதும் பந்த் போராட்டம் நடத்தப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. பல இடங்களில் மறியல் போராட்டங்கள் நடந்தன.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அகில இந்திய அளவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சிகள் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது.தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டத்துக்கு திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், தமாகா, மதிமுக, பாமக, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. முழு அடைப்பு போராட்டத்தில் திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் திரளாக பங்கேற்று போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதுபோல அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும்  முழு அடைப்பை வெற்றி பெற செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதனை ஏற்று தமிழகத்தில் அனைத்து நகரங்களிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆட்டோ, டாக்சிகளும் ஓடவில்லை. பல இடங்களில் மார்க்கெட்டுகளும் இயங்கவில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கடலூர்: கடலூரில் பாரதி சாலை, லாரன்ஸ் ரோடு, நெல்லிக்குப்பம் ரோடு என அனைத்து பிரதான சாலைகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. திருப்பாதிரிபுலியூர் பான்பரி மார்க்கெட், மஞ்சக்குப்பம் அண்ணா காய்கறி மார்க்கெட், முதுநகர் மார்க்கெட் என அனைத்து மார்க்கெட்களிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், வேன்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அரசு பஸ்களை பொறுத்தவரை போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. புதுச்சேரி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. டீசல் விலை உயர்வால் பெரிதும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகம், தேவனாம்பட்டினம் கடற்கரை ஆகிய இடங்களில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. பள்ளிகள் திறந்திருந்தபோதிலும் பேருந்துகள் குறைந்தளவே இயக்கப்பட்டதால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

   

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் அண்ணா மேம்பாலம் அருகில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தேர்தல் பணிக்குழு இள.புகழேந்தி, நகர செயலாளர் ராஜா, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் தென்னம்பாக்கம் மகேஷ், அவைத்தலைவர் தங்கராசு, மாணவர் அணி அகஸ்டின், பேச்சாளர் வாஞ்சிநாதன், காங்கிரஸ் தேசிய செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சந்திரசேகரன், நிர்வாகிகள் ராமராஜ், ஊடகப்பிரிவு மணிகண்டன், மீனவர் அணி கார்த்திகேயன், உமாபதி, விடுதலை சிறுத்தைகள் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன், மதிமுக ராமசாமி, சிபிஐ சேகர், ஜெகத்ரட்சகன், மணிவண்ணன் உள்ளிட்ட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் மஞ்சக்குப்பம் தலைமை தபால்நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் நடந்த மறியல் போராட்டத்தில் நிர்வாகி லோகு, மணிவாசகம் உள்ளிட்ட 50 பேர் கைது செய்யப்பட்டனர். அடுத்தடுத்து நடந்த போராட்டங்களால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபோன்று லாரன்ஸ் சாலை-பாரதி சாலை சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் ஆறுமுகம், மாதவன், மருதவாணன், அமர்நாத் உள்ளிட்ட 60 பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்டத்தில் பந்த்தின் காரணமாக மணல் குவாரி மற்றும் பல்வேறு பணிகளுக்கு ஈடுபடுத்தப்படும் 2000 டிப்பர் லாரிகள் நிறுத்தப்பட்டதாக சங்கத்தின் மாவட்ட தலைவர் பிரகாஷ் தெரிவித்தார்.  

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் நடந்த கடையடைப்பு போராட்டத்தில் விருத்தாசலம் கடைவீதி, ஜங்ஷன்ரோடு, கடலூர் ரோடு, தென்கோட்டை வீதி, பாலக்கரை மற்றும் பெண்ணாடம், மங்கலம்பேட்டை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உள்ள மருத்துவமனைகள், கடைகள், காய்கறி மார்க்கெட்டுகள், பெட்ரோல் பங்குகள் அனைத்தும் மூடப்பட்டது. தனியார் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. இதனால் விருத்தாசலம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. பேருந்து வசதிகள் இல்லாமல் விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பல்வேறு வகைகளில் அவதிப்பட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட், சோஷலிஸ்ட் லிபரல் ஆகிய கட்சி சார்பில் நடைபெற்ற பந்த் மற்றும் மறியல் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் அசோகன் தலைமை தாங்கினார். சந்திரசேகர், ஜீவாநந்தம், தனவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

சிதம்பரம்: சிதம்பரத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஓட்டல்கள் மூடப்பட்டிருந்தன. பால், மருந்து மற்றும் காய்கறி கடைகள் மட்டும் திறந்திருந்தன. பெரும்பாலான தனியார் பேருந்துகள் ஓடவில்லை. அரசு பேருந்துகள் மட்டும் ஓடியது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சிதம்பரம் காந்தி சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஊர்வலமாக வந்து பேருந்து நிலையம் அருகே கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் மூசா தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் வாஞ்சிநாதன், நகர செயலாளர் ராஜா, சிஐடியு ஆட்டோ முத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நகர போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 40 பேரை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மேலும் சிதம்பரம் மேலவீதி கஞ்சி தொட்டி அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட துணைச் செயலாளர் காசிலிங்கம் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் சேகர், நகர செயலாளர் தமிமுன்அன்சாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நகர போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 35 பேரை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

புவனகிரி: புவனகிரி, பு.முட்லூர், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. பள்ளிகள் வழக்கம்போல் இயங்கியது. அரசு பஸ்கள் வழக்கம்போல் ஓடினாலும், தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. பரங்கிப்பேட்டை அருகே உள்ள பு.முட்லூர் எம்ஜிஆர் சிலை அருகில் காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நிர்வாகி ஜெகநாதன் தலைமையில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் திமுகவின் பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் முத்து பெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

நெய்வேலி: நெய்வேலியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும் மெயின் பஜாரில் இருந்து பேரணி நடந்தது. பின்னர் வட்டம்-19ல் உள்ள மத்திய அரசின் துணை அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டத்துக்கு நகர செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். சிஐடியு தலைவர் வேல்முருகன், செயலாளர் ஜெயராமன், நிர்வாகிகள் குப்புசாமி, திருஅரசு உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 70 பேரை காவல்துறையினர் கைது செய்து வட்டம்-27ல் உள்ள என்எல்சி திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கபட்டனர்.

பண்ருட்டி: பண்ருட்டி அருகே புதுப்பேட்டையில் நடந்த பந்தில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது. பேருந்துகள் சரியாக இயங்கவில்லை. பண்ருட்டியில் சிபிஎம் நகர செயலாளர் உத்திராபதி, சிபிஐ வட்ட தலைவர் சக்திவேல்உள்ளிட்ட 69 பேர் சாலை மறியலில் ஈடுபட்டு கைதானார்கள். மேலும் பண்ருட்டியில் பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன. தனியார் பேருந்துகள் ஓரளவு மட்டுமே ஓடின. அரசு பேருந்துகள் முழுமையாக இயங்கின. ஒரு சில ஆட்டோக்கள் மட்டும் இயங்கின.குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி, வடலூரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. ஆட்டோக்கள், வேன்கள் ஓடவில்லை. அரசு பேருந்துகள் வழக்கம்போல் ஓடிக் கொண்டிருந்தது. ஒருசில தனியார் பேருந்துகள், மினி பேருந்துகள் ஓடிக் கொண்டிருந்தது. பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குறிஞ்சிப்பாடி சாவடி பேருந்து நிறுத்தம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒன்றிய செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் ராஜி, சிவகாமி, ஒன்றிய கமிட்டி கிருஷ்ணமூர்த்தி, மணிவண்ணன், ஜெயராமன், சீனிவாசன், இளங்கோ, போக்குவரத்து மாவட்ட செயலாளர் ஜான்விக்டர், அஞ்சலை, முத்துவேல் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் பகுதியில் திமுக மற்றும் காங்கிரஸ் சார்பில் கண்டன பேரணி நடந்தது. திமுக அலுவலகத்தில் இருந்து பேருந்து நிலையம் வரை நடந்த இந்த பேரணியில் அனைத்து கட்சியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். திமுக ஒன்றிய செயலாளர் முத்துசாமி தலைமை தாங்கினார். நகர செயலாளர் கணேசமூர்த்தி மற்றும் அவைத்தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் மணிமொழி, நகர தலைவர் அன்வர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காட்டுமன்னார்கோவில் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் முன் நடந்த மறியல் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியை சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். விடுதலை சிறுத்தைகள் தொகுதி செயலாளர் மணவாளன் தலைமையில் காட்டுமன்னார்கோவில் முக்கிய கடைவீதி பகுதிகளில் பேரணி நடத்தினர்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் பந்த் காரணமாக பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. தனியார் பேருந்துகள் ஓடவில்லை. மாவட்டம் முழுவதும் சுமார் ஆயிரம் கைது செய்யப்பட்டனர். பந்த்தின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

உள்ளிட்ட 69 பேர் சாலை மறியலில் ஈடுபட்டு கைதானார்கள். மேலும் பண்ருட்டியில் பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன. தனியார் பேருந்துகள் ஓரளவு மட்டுமே ஓடின. அரசு பேருந்துகள் முழுமையாக இயங்கின. ஒரு சில ஆட்டோக்கள் மட்டும்

இயங்கின.

குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி, வடலூரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. ஆட்டோக்கள், வேன்கள் ஓடவில்லை. அரசு பேருந்துகள் வழக்கம்போல் ஓடிக் கொண்டிருந்தது. ஒருசில தனியார் பேருந்துகள், மினி பேருந்துகள் ஓடிக் கொண்டிருந்தது. பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குறிஞ்சிப்பாடி சாவடி பேருந்து நிறுத்தம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒன்றிய செயலாளர் தண்ட

பாணி தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் ராஜி, சிவகாமி, ஒன்றிய கமிட்டி கிருஷ்ணமூர்த்தி, மணிவண்ணன், ஜெயராமன், சீனிவாசன், இளங்கோ, போக்குவரத்து மாவட்ட செயலாளர் ஜான்விக்டர், அஞ்சலை, முத்துவேல் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் பகுதியில் திமுக மற்றும் காங்கிரஸ் சார்பில் கண்டன பேரணி நடந்தது. திமுக அலுவலகத்தில் இருந்து பேருந்து நிலையம் வரை நடந்த இந்த பேரணியில் அனைத்து கட்சியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். திமுக ஒன்றிய செயலாளர் முத்துசாமி தலைமை தாங்கினார். நகர செயலாளர் கணேசமூர்த்தி மற்றும் அவைத்தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் மணிமொழி, நகர தலைவர் அன்வர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காட்டுமன்னார்கோவில் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் முன் நடந்த மறியல் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியை சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். விடுதலை சிறுத்தைகள் தொகுதி செயலாளர் மணவாளன் தலைமையில் காட்டுமன்னார்கோவில்

முக்கிய கடைவீதி பகுதி

களில் பேரணி நடத்தினர்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் பந்த் காரண

மாக பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. தனியார் பேருந்துகள் ஓடவில்லை. மாவட்டம் முழுவதும் சுமார் ஆயிரம் கைது செய்யப்பட்டனர். பந்த்தின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

திட்டக்குடி:  திட்டக்குடியில் டீக்கடை, ஓட்டல், பால் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. இங்குள்ள தளவாய் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளி மாநிலங்களுக்கு 2000 லாரிகளில் சிமெண்ட் மூட்டைகள் அனுப்பப்படுவது வழக்கம். பந்த் காரணமாக அவை இயக்கப்படவில்லை. மேலும் 2000 டாரஸ் லாரி

களும் இயக்கப்படவில்லை. தனியார் பஸ் ஓடவில்லை. லாரிகள், ஆட்டோக்கள் ஓடவில்லை. பெரும்

பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. திட்டக்குடி அஞ்சல் அலுவலகத்தை சிபிஎம் கட்சி சார்பில் மாநில நிர்வாகி காமராஜ் தலைமையில் முற்றுகையிட்ட 15 பேரையும், சிபிஐ வட்ட செயலாளர் சின்னதுரை தலைமையில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் செய்த 14 பேரையும் திட்டக்குடி சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் போலீசார் கைது செய்தனர். வேப்பூர்: வேப்பூர் கூட்ரோட்டில் அனைத்து கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. காங்கிரஸ் கடலூர் தெற்கு மாவட்டத்தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். திமுக நல்லூர் ஒன்றிய பொருளாளர் வெங்கடாசலம், ஒன்றிய துணை செயலாளர் மாரிமுத்தாள் குணா, விடுதலை சிறுத்தை ஒன்றிய செயலாளர் சந்தோஷ், காங்கிரஸ் வட்டார தலைவர் ராயப்பிள்ளை, விடுதலை சிறுத்தை ஒன்றிய துணை செயலாளர்கள் முத்துக்கருப்பன், சுரேஷ், வழக்கறிஞர்கள் சுரேஷ்குமார், மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷங்களும் எழுப்பப்பட்டது.

Related Stories: