மேச்சேரி வட்டார விவசாயிகள் வேளாண் மையத்திற்கு கண்டுணர்வு சுற்றுலா

மேட்டூர், செப்.9: மேட்டூர் தாலுகா மேச்சேரி வட்டார விவசாயிகள் நாமக்கல் வேளாண் அறிவியல் மையத்திற்கு கண்டுணர்வு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.

ஒருங்கிணைந்த விவசாயிகள் தங்களின் வருமானத்தை அதிகப்படுத்தி, விவசாயத்தை லாபகரமாக்கலாம் என்பதை நேரடியாக கண்டுணர வேளாண்மைத்துறை சார்பில், அட்மா திட்டத்தில் கண்டுணர்வு பயணம் அழைத்து செல்லப்படுவார்கள். நேற்று மேச்சேரி வட்டாரத்தில் 50 விவசாயிகள் நாமக்கல் வேளாண்மை அறிவியல் மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

தனி பஸ்சில் சென்ற விவசாயிகளின் பயணத்தை, வேளாண் உதவி இயக்குநர் சுஜாதா கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அறிவியல் மையத்தை சேர்ந்த பண்ணை மேலாளர் டெய்சி, குறைந்த செலவில் அடர்பாலிதீன் பையில் மண்புழு வளர்ப்பு, பரண்மேஹ் ஆடு வளர்ப்பு, அசோலா வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, ஹட்ரோ போனிக் முறையில் தீவன வளர்ப்பு, ஆசோலா வளர்ப்பு மற்றும் சிறு தானியங்கள் வளர்ப்பு மதிப்பு கூட்டுப்பட்டு விற்பனை செய்யும் முறைகள் பற்றி எடுத்து கூறினார். இந்த பயணத்தின் போது வேளாண்மை அலுவலர் காயத்திரி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் செல்வகுமார், தொழில்நுட்ப மேலாளர்கள் பத்மாவதி, சக்திவேல் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

Related Stories: