கெத்து காட்டும் வெத்து வேட்டு எஸ்ஐ.....

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனு கொடுக்க வருபவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் சம்பவங்கள் அவ்வப்போது அறங்கேறி வந்ததால் பிரதான நுழைவு வாயில், பின்புற வாயிலிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்படுவது வழக்கம். பொது மக்கள் சோதித்து அனுமதிக்கும் பணியை முறையாக செய்யாமல் கலெக்டர் அலுவலக ஊழியர்கள், பத்திரிகையாளர்களிடம் போலீசார் கடும் கெடுபிடி காட்டுகிறார்களாம்... கன்டோன்மென்ட் எஸ்ஐ ஒருவர், அவருக்கான பணியை சரியாக செய்கிறாரோ இல்லையோ.. கலெக்டர் உதவியாளர்கள், ஏபிஆர்ஓ, பத்திரிகையாளர்கள் யார் என்று கூட தெரிந்து கொள்ளாமல் அவர்கள் பணிகளுக்கு ஒவ்வொரு திங்கள் கிழமையும் இடையூறு செய்து வருகிறாராம்...

கலெக்டர் அலுவலக ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் யாராக இருந்தாலும் சரி அடையாள அட்டையை கழுத்தில் அணிந்து தான் வரவேண்டும் என கெத்துகாட்டுகிறாராம்.... அவரை பற்றி சக போலீசாரிடம் விசாரித்தால், சென்னையில் போக்குவரத்து பிரிவில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் திருச்சிக்கு மாற்றலாகி வந்துள்ளாராம்.. நேரடி எஸ்ஐ யாக தேர்வு செய்யப்பட்ட அவர், சென்னை பணிக்கு பின், தற்போது திருச்சிக்கு வந்துள்ளாராம்.... பத்திரிகையாளர்கள், கலெக்டர் அலுவலக ஊழியர்கள் என தெரிந்தும் கூட அந்த எஸ்ஐ, தனக்குரிய கெத்தை அவ்வப்போது காட்டுகிறாராம்... வெறும் கெத்து தான் தவிர... ஆனால் அவர் வெறும் வெத்து வேட்டு என்கின்றனர் போலீசார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: