தமிழ் புத்தாண்டு விடுமுறையால் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் வெறிச்

ஒட்டன்சத்திரம், ஏப். 14: சித்திரை முதல் நாளான இன்று தமிழ் வருடப்பிறப்பு ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் வீடுகளில் சிறப்பு வழிபாடு நடத்தியும், கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதும் வழக்கம். இதேபோல் கேரளாவில் இன்று சித்திரை விஷூ என்ற கனி காணும் நிகழ்ச்சி நடைபெறும்.  இதற்காக ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள் அதிகளவில் கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும். சித்திரை விஷூ கனி காணும் நிகழ்வையொட்டி நேற்று முன்தினம் முன்கூட்டியே கேரளா மற்றும் தமிழக்ததின் பல்வேறு பகுதிகளுக்கு காய்கறி ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனால் நேற்று மார்க்கெட்டிற்கு விடுமுறை விடப்பட்டது. வெளியூர் வியாபாரிகள் அதிகளவில் வராததால், உள்ளூர் விவசாயிகள், வியாபாரிகள் குறைந்தளவே வந்ததால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் நேற்று மட்டும் ரூ.3 கோடியளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: