ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.9.53 கோடியில் 25 பள்ளி கட்டிடங்கள், 5 அரசு அலுவலக கட்டிடங்கள்

*முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார்

வாலாஜா : ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.9.53 கோடியில் 25 பள்ளி கட்டிடங்கள், 5 அரசு அலுவலக புதிய கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் நேற்று திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து பல்வேறு திட்ட பணிகள் மற்றும் புதிய கட்டிடங்கள் ஆகியவற்றை காணொளி மூலம் நேற்று திறந்து வைத்தார். அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.9.53 கோடியில் 25 பள்ளி கட்டிடங்கள், 2 கிராம செயலகங்கள் மற்றும் 3 ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடங்கள் உள்ளிட்டவைகளை இதில் அடங்கும்.

இதில் வாலாஜா ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூண்டி கிராமத்தில் ரூ.42.65 லட்சம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2828 சதுர அடியில் தரை தளத்தில் 2 வகுப்பறைகளும், முதல் தளத்தில் 2 வகுப்பறைகளுக்கான ரூ.65.49 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இதே ஊராட்சியில் 1568 சதுர அடி பரப்பளவில் கிராமத்தில் ஒருங்கிணைந்த ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலாளர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலங்கள் கூட்டரங்கம் மற்றும் கழிவறை உள்ளிட்ட புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.

இதில் மாவட்ட கலெக்டர் வளர்மதி கலந்து கொண்டு கிராம செயலக கட்டிடத்தில் குத்து விளக்கேற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட சிஇஓ உஷா, ஊராட்சி மன்ற தலைவர் கங்காபாய், பிடிஓக்கள் சிவப்பிரகாசம் சிவராமன், தாசில்தார் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் கலவை அடுத்த மேச்சேரி ஊராட்சியில் உள்ள காந்தி நகரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கூடுதல் புதிய 2 வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், தலைமை தாங்கினார். ஆற்காடு ஒன்றியக்குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன், மாவட்ட குழு உறுப்பினர் சிவக்குமார், திமுக ஒன்றிய செயலாளர் பாண்டுரங்கன், ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் ஷானவாஸ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், சிறப்பு அழைப்பாளராக ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன் கலந்துகொண்டு 2 வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார். தொடர்ந்து, பள்ளிக்குத் தேவையானவை குறித்து தலைமையாசிரியரிடம் கேட்டறிந்தார். பின்னர், அப்பகுதி பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் விஜயா, கிராம நிர்வாக அலுவலர் திருமால், ஆசிரியர்கள், வார்டு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

The post ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.9.53 கோடியில் 25 பள்ளி கட்டிடங்கள், 5 அரசு அலுவலக கட்டிடங்கள் appeared first on Dinakaran.

Related Stories: