ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் ஏவுகணை தாக்குதல்: எமிரேட்ஸ் ராணுவம் முறியடிப்பு

துபாய்: வளைகுடா நாடான ஏமனில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில் அரசுக்கு ஆதரவாகவும்,ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகவும் சவுதி தலைமையிலான கூட்டு படை தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 17ம் தேதி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அபுதாபி விமான நிலையம் அருகே  உள்ள எண்ணைய் கிடங்கு உள்பட 2 இடங்களை குறி வைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தினர். எண்ணெய்  டேங்கர்கள் வெடித்து சிதறியதில் 2 இந்தியர்கள் உள்பட 3 பேர் பலியாயினர். இந்நிலையில், நேற்று அபுதாபி நகரை நோக்கி வந்த 2 ஏவுகணைகளை எப்.16 போர் விமானம் இடைமறித்து அழித்தது.  இதுகுறித்து அந்நாட்டின் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கை, ‘எந்த ஒரு அச்சுறுத்தலையும் சந்திக்க ராணுவம் முழு தயார் நிலையில் உள்ளது. இந்த தாக்குதலில் உயிழப்பு எதுவும் இல்லை’ என தெரிவித்துள்ளது….

The post ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் ஏவுகணை தாக்குதல்: எமிரேட்ஸ் ராணுவம் முறியடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: