வேளாண் பல்கலை பேராசிரியர்களுக்கு சாண எரியவாயு தொழில்நுட்ப பயிற்சி

 

கோவை, மார்ச் 16: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள புதுப்பிக்கவல்ல ஆற்றல் பொறியியல் துறை, புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சகத்தின் நிதியுதவியுடன் சாண எரிவாயு மற்றும் பயிற்சி மையத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள பல்வேறு வேளாண் துறை சேர்ந்த உதவி பேராசிரியர்களுக்கான 4 பயிற்சி நடந்தது.

பயிற்சியில் சாண எரிவாயு உற்பத்தி, பயன்பாடு, சுத்திகரிக்கப்பட்ட பயோமீத்தேன் தயாரிப்பு, சூரிய வெப்பம் ஒளிமின்னழுத்த தொழில்நுட்பங்கள் மற்றும் இதர புதிய புதுப்பிக்கவல்ல தொழில்நுட்பங்கள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. மேலும், சாண எரிவாயு காலனின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு குறித்த நடைமுறை பிரச்னைகளை பற்றி அறிய பயிற்சியாளர்கள் களப்பயிற்சியிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.

பயிற்சி நிறைவு விழா பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையத்தில் நடந்தது. இதில், பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் வரவேற்றார். வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் ரவிராஜ் சிறப்புரையாற்றி பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

The post வேளாண் பல்கலை பேராசிரியர்களுக்கு சாண எரியவாயு தொழில்நுட்ப பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: