வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,800 கிலோ குட்கா பறிமுதல்: 5 பேர் கைது

கூடுவாஞ்சேரி:செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு அரசு பள்ளி எதிரில் உள்ள ஒருவரது வீட்டில் போதை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாறு வேடத்தில் அந்த வீட்டை ஆய்வு செய்தனர். அப்போது, வீட்டில் குட்கா பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, அங்கிருந்த 5 பேரை கூடுவாஞ்சேரி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். அதில், மறைமலைநகர் அடுத்த கூடலூர் பகுதியை சேர்ந்த ஷாஜத் (36), மேற்கு வங்கத்தை சேர்ந்த அப்துல் சஹீத் (36), அப்துல் ரஹீம் (36), அப்துல் ஆசீம் (62), அயூப் (38) என தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிந்து 5 பேரையும் கைது செய்து செங்கல்பட்டில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி அங்குள்ள கிளை சிறையில் அடைத்தனர். இதனையடுத்து, 25 கிலோ எடை கொண்ட ஜர்தா 50 மூட்டைகளும், 4 டப்பா சுண்ணாம்பு, 2 கிலோ பாக்கு, 15 கிலோ மாவா பாக்கெட் உட்பட 1,800 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,800 கிலோ குட்கா பறிமுதல்: 5 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: