நாமக்கல், டிச.27: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 29ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. கலெக்டர் உமா தலைமை வகிக்கிறார். கூட்டத்தில், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்களது பயிர் சாகுபடிக்கு தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடுபொருள் இருப்பு விபரங்கள், வேளாண் உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்வதுடன், தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
The post விவசாயிகள் குறை தீர் கூட்டம் appeared first on Dinakaran.