விவசாயிகளின் உற்ற நண்பனான நத்தை குத்தி நாரைகளை பாதுகாப்பது நம் கடமை-வன உயிரியல் ஆராய்ச்சியாளர் வலியுறுத்தல்

மன்னார்குடி : விவசாயிகளின் உற்ற நண்பனான நத்தை குத்தி நாரைகளை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாக கருத வேண்டும் என வன உயிரியல் ஆராய்ச்சியாளர் வலியுறுத்தி உள்ளார்.நத்தை குத்தி நாரைகள் என்றழைக்கப்படும் பறவைகள் சைபீரியா நாட்டை தனது பூர்விகமாக கொண்டிருந்தாலும் தற்போது பாகிஸ்தான், மியான்மர், தாய்லாந்து, இலங்கை நாடுகளில் பரவலாக வாழ்கிறது. தற்போது இந்தியா வில் வலசை செல்லும் உள்ளுர்ப் பறவையாக பெருமளவில் உள்ளன. இதன் கீழ் அலகு மேல் எழும்பியும், மேல் அலகு கீழே வளைந்தும், நத்தை யைப் பிடிக்கும் போது, அதன் ஓடு வழுக்காமல் இரையைப் பிடிக்க வசதி யாக, இயற்கையாக அமைந்தால் நத்தைகுத்தி நாரைகள் என்று அழைக்கப் படுகிறது. திருச்சி காவிரி ஆற்றில் நத்தை குத்தி நாரைகள் தற்போது மிகுதியாக காணப் படுகின்றன. அவை கூட்டம், கூட்டமாக போட்டி போட்டுக் கொண்டு நீரைக் களைவதும், அழகிய மூக்கினால் மீன்களை கொத்திச் செல்வதையும் அவ் வழியே போவோர் வருவோர் கண்டு களித்தனர்.இதுகுறித்து வன உயிரியல் விஞ்ஞானி டாக்டர் குமரகுரு கூறுகையில், விவசாயிகளின் நண்பனாக நத்தை குத்தி நாரைகள் விளங்குகிறது. காரணம், வயல்வெளிகளில் இயற்கையாக காணப்படும் நன்னீர் மெட்டிகள் என்று சொல்லக் கூடிய நத்தைகள் விளைநிலங்களில் விவசாயிகளால் பயிரிடப் பட்ட பயிர்களை சேதப்படுத்தும். இதன் காரணமாக மகசூல் குறைந்து விவ சாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்பாடு. இந்த நத்தைகளை நத்தை குத்தி நாரைகள் உணவாக உட்கொண்டு சேதங்களை குறைத்து விவசாயிகளின் நண்பனாக விளங்குகிறது.இந்த பறவைகள் பெரும்பாலும் டெல்டா மாவட்டங்களில் குறிப்பாக நெல் பயிரிடப்படும் பகுதிகளிலும் அதனை ஒட்டிய நீர் நிலைகளிலும் அதிகளவில் காணப்படும். இந்த பறவைகள் வயல்வெளிகளில் தனது எச்சங்களை இட்டு செல்வதால் மண் வளம் செறிவூட்டப்பட்டு அந்த நிலங்களில் மகசூலை அதிகரிக்க உதவுகிறது. தற்போது உலகளவில் நிலவும் பருவ நிலை மாற்றம் காரணமாக நத்தை குத்தி நாரைகளுக்கு ஏற்ற சுற்றுசூழல் இந்தியாவில் நிலவுகிறது. இந்த காரணத்தினால் இந்த பறவைகள் கடந்த 5 வருடங்களாக இந்தியாவிலே தங்கி தங்களின் இன விருத்தி மற்றும் உணவு வாழ்விடம் ஆகியவற்றை அமைத்து கொண்டு விவசாயி களுக்கு உற்ற தோழனாக வயல் சார்ந்த இடங்களில் வாழ்ந்து வருகிறது. எனவே, நத்தை குத்தி நாரைகளை பாது காப்பது ஒவ்வொரு விவசாயிகளின் கடமையாக உள்ளது என்றார்….

The post விவசாயிகளின் உற்ற நண்பனான நத்தை குத்தி நாரைகளை பாதுகாப்பது நம் கடமை-வன உயிரியல் ஆராய்ச்சியாளர் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: