விளையாட்டு துளிகள்

மாலத்தீவு போயாச்சுஐபிஎல் தொடரில் விளையாடிய ஆஸி வீரர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோர் சொந்த நாட்டுக்கு மே 15ம் தேதி வரை செல்ல முடியாது. அதனால் அவர்கள் அனைவரையும் நேற்று மாலத்தீவுக்கு அனுப்பி வைத்தனர்.ஜிம்பாப்வே-பாக் டெஸ்ட்ஜிம்பாப்வோ-பாகிஸ்தான் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி இன்று ஹராரேவில் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டியை  பாகிஸ்தான் வென்று தொடரில் 1-0 என் கணக்கில் முன்னிலை வகிக்கிறது.மலேசியாவிலும் தடைஇந்திய விமானங்கள் வர மலேசியாவும் தடை விதித்துள்ளது. அதனால் அங்கு மே 23ம் தேதி தொடங்க உள்ள ‘மலேசிய ஓபன் பேட்மின்டன்’ போட்டியில் இந்தியர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.முதல் விக்கெட் கீப்பர்ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தர வரிசைப் பட்டியலில் 6 வது இடத்தை இந்திய வீரர் ரிஷப் பன்ட் பிடித்துள்ளார்். இதன் மூலம் டெஸட் தர வரிசை பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் கைப்பற்றிய  முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற  பெருமையை பெற்றுள்ளார். வாய்ப்பு இழந்த வில்வித்தை வீரர்கள் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் இந்தியாவில் இருந்து விமானங்கள் வர பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளன. அதனால் இந்திய வில்வித்தை வீரர்கள்  உலக கோப்பை வில்வித்தை போட்டியில் பங்கேற்க முடியாத நிலைமை  ஏற்பட்டுள்ளது. உலக கோப்பை ஜூன் 23ம் தேதி முதல் 7 நாட்களுக்கு சுவிட்சர்லாந்தில் நடைபெற உள்ளது. அதற்காக விசா கேட்டு விண்ணப்பித்த இந்திய வில்வித்தை அணியின் விண்ணப்பங்களை சுவிட்சர்லாந்து தூதரகம் நிராகரித்து  விட்டது.காலிறுதியில் டொமினிக்ஸ்பெயினில் நடைபெறும்  மாட்ரிட் ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்று ஆட்டங்கள் நேற்று நடந்தன. அதில் ஆஸ்திரியா வீரர் டொமினிக் தீம்(4வது ரேங்க்)  7-6, 6-4 என நேர் செட்களில்  ஆஸ்திரேலியா வீரர் அலெக்ஸ் டி  மினவுரை(24வது ரேங்க்) வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் கஜகிஸ்தான் வீரர் அலெக்சாண்டர் பப்லிக்(44வது ரேங்க்)  6-4, 6-3 என நேர் செட்களில்  ரஷ்ய  வீரர் அஸ்லான் கரட்சேவ்ைவை (27வது ரேங்க்) வீழ்த்தி  காலிறுதிக்கு தகுதிப்பெற்றார்.ஆம்புலன்ஸ் விமானம்கொரோனா தொற்றுக்கு ஆளான சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் லட்சுமபதி பாலாஜி, மைக்கேல் ஹஸ்ஸி(ஆஸ்திரேலியா), பயண ஏற்பாட்டு ஊழியர்  என மூவர் ஆகியோரை டெல்லியில் தனிமைப்படுத்தி இருந்தனர். இந்நிலையில்  அவர்களை நேற்று  ‘ஆம்புலன்ஸ் விமானம்’ மூலம் சென்னை அழைத்து வந்தனர். அவர்கள் சென்னையில் தனிமையை தொடர்வதுடன், மருத்துவக் கண்காணிப்பிலும் இருப்பார்கள்.வேதனையில் வேதாஇந்திய கிரிக்கெட் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தியின் அக்கா வத்சலா சிவகுமார்(45) கொரோனா தொற்று காரணமாக சிக்மங்களூரில் உயிரிழந்தார். சில நாட்களுக்கு முன்புதான் வேதாவின் அம்மா கொரோனா தொற்று காரணமாக  இறந்தார். …

The post விளையாட்டு துளிகள் appeared first on Dinakaran.

Related Stories: