விடைத்தாளில் குளறுபடி நடந்துள்ளதால் நீட் தேர்வு எழுதிய அசல் OMR தாளை வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மதுரை: விடைத்தாளில் குளறுபடி நடந்துள்ளதால் நீட் தேர்வு எழுதிய அசல் OMR தாளை வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 720 மதிப்பெண்களுக்கு 670 மதிப்பெண்ணுக்கு சரியான பதில் எழுதியபோதும் 115 மதிப்பெண்களே வந்ததாக திருநெல்வேலியை சேர்ந்த மாணவன் எவல்ட் டேவிட் வழக்கு தொடர்ந்தார். 115 மதிப்பெண்கள் மட்டுமே இருக்கக்கூடிய OMR விடைத்தாளை தனது பெயரில் பதிவேற்றம் செய்துள்ளதாக மாணவர் குற்றம்சாட்டியுள்ளார்.  திருநெல்வேலியை சேர்ந்த எவல்ட் டேவிட் என்ற மாணவர் தாக்கல் செய்த மனுவில், தான் 12-ம் வகுப்பு முடித்துவிட்டு கடந்த ஜூலை மாதம் தேசிய முகமை நடத்திய நீட் தேர்வு எழுதியதாகவும், அந்த தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 670 மதிப்பெண்ணுக்கு சரியான பதில் எழுதியபோதும் 115 மதிப்பெண்களே வந்ததாக அந்த மாணவர் தெரிவித்தார். இந்நிலையில் கடந்த மாதம் அந்த நீட் அமைப்பின் இணையதளத்தில் தேர்வு முகமை OMR விடைத்தாளை பதிவேற்றம் செய்தது. அந்த விடைத்தாளை பார்த்தவுடன் மாணவர் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளார். ஏனெனில் நீட் அமைப்பின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விடைத்தாள் தன்னுடைய விடைத்தாள் இல்லை எனவும், வேறு ஒருவருடைய விடைத்தாளை தன்னுடைய பெயரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அந்த மாணவர் குற்றம் சாட்டினார்.         இதையடுத்து தன்னுடைய OMR விடைத்தாளில் மிகப்பெரிய முறைகேடு ஏற்பட்டுள்ளதாகவும், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் எனவும் தான் எழுதிய OMR விடைத்தாளையும் அதனுடன் சேர்த்து கார்பன் விடைத்தாளையும் இணைத்து தர வேண்டும் எனவும் அதுவரை தேசிய மருத்துவ கலந்தாய்வு நடைபெற்றால் அதில் தனக்கான மருத்துவ கல்லூரிக்கான இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் மாணவர் மனுதாக்கல் செய்திருந்தார்.இதைத்தொடர்ந்து தேசிய முகமை தேர்வு செயலாளருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், மாணவன் எழுதிய OMR விடைத்தாளையும் அதனுடன் சேர்த்து கார்பன் விடைத்தாளையும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணை வரும் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது….

The post விடைத்தாளில் குளறுபடி நடந்துள்ளதால் நீட் தேர்வு எழுதிய அசல் OMR தாளை வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: