வாலிகண்டபுரத்தில் சிறப்பு மனு முகாம் 47ல் 41 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை

 

பெரம்பலூர்: மங்களமேடு உட்கோட்ட எல்லைக் கு உட்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்களின் குறை களை போக்க வாலிகண்ட புரத்தில்நடைபெற்ற சிறப்பு மனுமுகாம்.பெறப்பட்ட 47 மனுக்களில் 41 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், மங் களமேடு உட்கோட்ட டிஎஸ் பி சீராளன், மங்களமேடு உட்கோட்ட எல்லைக்கு உட் பட்ட கிராமங்களில் வசிக் கும் மக்களின் குறைகளை போக்கும் வகையில் சிறப் பு மனுமுகாம் நடத்தினார். பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி உத்தரவி ன்பேரில் நேற்று(29ம் தேதி) பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் மங்களமேடு உட்கோட்டத் தில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய் யும் வகையில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது.

இந்த மனு முகாமில் மங்களமேடு உட்கோட்டடி எஸ்பிசீராளன் தலைமையில் நடைப்பெற்றது.இம்மனு சிறப்பு முகாமில் குன்னம் போலீஸ் இன்ஸ் பெக்டர் சந்திரசேகர் மங்க ளமேடு வட்ட போலீஸ் இன் ஸ்பெக்டர் நடராஜன் மற் றும் சப்.இன்ஸ்பெக்டர், போ லீசார் கலந்து கொண்டு பொது மக்களிடம் மனுக்க ளைப் பெற்றனர். இந்த சிற ப்பு மனு முகாம் மூலம் மொ த்தம் 47 மனுக்கள் பெற்றப் பட்டு அவற்றில் 41மனுக் கள்மீது உடனடியாக நடவடி க்கை மேற்கொள்ளப்பட் டது.மீதமுள்ள மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொ ள்ள சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேசன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

The post வாலிகண்டபுரத்தில் சிறப்பு மனு முகாம் 47ல் 41 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: