நெட்டிஸன்களை கண்ணீர் மழையில் நனைத்துக்கொண்டிருக்கிறது ஒரு வைரல் வீடியோ. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். சிகிச்சையளித்த மருத்துவர் சிறுவனிடம் ‘உன் கனவு என்ன..?’ என்று கேட்டிருக்கிறார். ‘பேட்மேனைப் பார்க்க வேண்டும்...’ என்று சிறுவன் சொல்லியிருக்கிறான். அடுத்த நாளே பேட்மேன் உடையணிந்து மருத்துவமனைக்கு வந்திருக்கிறார் அந்த மருத்துவர்.
பேட்மேன் டாக்டர்!
