வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு

தஞ்சாவூர், ஆக. 30: தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் நேற்றுஆய்வு செய்தார். அதன் பின்பு கலெக்டர் கூறியதாவது: தஞ்சாவூர் மாநகராட்சி சிவகங்கை பூங்காவில் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு திட்டப்பணிகள், பிள்ளையார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், வகுப்பறைக் கட்டிடத்தின் தன்மை, சமையல் கூடத்தின் சுகாதாரம் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

திருவோணம் ஒன்றியம், காவாளிப்பட்டி ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பங்கள் சரிபார்ப்பு பணிகள் குறித்து பொதுமக்களிடம் நேரில் கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது. மேற்கண்ட பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வு பணிகளின்போது தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) அன்பரசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், ஒரத்தநாடு வட்டாட்சியர் (பொ) சிவக்குமார், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: