வலங்கைமான் அருகே புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டி தர வேண்டும்

 

வலங்கைமான், ஜன. 19: வலங்கைமான் அடுத்த கீழ அமராவதி பகுதியில் பழுதடைந்த கட்டிடத்தில் செயல்பட்டு வரும் அங்காடி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித் தர பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் . வலங்கைமான் அடுத்த திருவோணமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழ அமராவதி பகுதியில் சித்தன் வாளூர் ஊராட்சிக்கு உட்பட்ட தென்கரைக் குச்சி பாளையம் மற்றும் கீழ அமராவதி மேல அமராவதி மூலக்கால் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அங்காடி செயல்பட்டு வருகிறது .

ஆலங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த அங்காடிக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக புதிய கட்டிடம் கட்டப்பட்டது கட்டிடத்தின் தரை தளம் முன்னதாக பழுதடைந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கான்கிரீட் மேற்கூரைகள் அவ்வப்போது பெயர்ந்து விழ தொடங்கின .அதனை அடுத்து மழைக்காலங்களில் கட்டிடத்தின் உட்பகுதியில் தண்ணீர் கசிந்து அரிசி ஜீனி உள்ளிட்ட குடிமை பொருட்கள் சேதம் அடைந்தது .

இந்நிலையில் மழைக்காலங்களில் குடிமைப் பொருட்கள் சேதம் அடையாமல் இருப்பதற்கு தற்காலிகமாக அங்காடி கட்டிடத்தில் மேற்பகுதியில் பிளாஸ்டிக் பாய் கொண்டு மூடப்பட்டுள்ளது . இருப்பினும் கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருப்பதால் இப்பகுதி பொதுமக்களின் நலன் கருதி பழைய அங்காடிக் கட்டிடத்தினை இடித்துவிட்டு அப்பகுதியிலேயே புதிய அங்காடிக் கட்டிடம் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வலங்கைமான் அருகே புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டி தர வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: