வரதட்சணை புகாரில் நான்கு பேர் மீது வழக்கு

 

திருவாடானை, மே 19:சிவகங்கை போஸ் நகரை சேர்ந்தவர் நிவேதா(24). இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே மருதவயல் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் சீதாராமனுக்கும் கடந்த 23.5.2021ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது நிவேதாவிற்கு 43 பவுன் தங்கநகையும், சீதாராமனுக்கு 8 பவுன் தங்க நகையும் சீதனமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கூடுதல் வரதட்சணையாக 20 பவுன் தங்க நகை வாங்கி வருமாறு கணவர் சீதாராமன் மற்றும் அவரது தந்தை ராமகிருஷ்ணன், தாய் செல்வி, கணவனின் சகோதரி மங்களபாரதி ஆகியோர் துன்புறுத்தியதாக நிவேதா திருவாடானை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மனிதா ராணி நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post வரதட்சணை புகாரில் நான்கு பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: