வண்டலூர் உயிரியல் பூங்காவில்13 வயது பெண் வெள்ளைப்புலி அட்டாக்ஸியா நோய் பாதிப்பால் உயிரிழப்பு

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 13 வயது பெண் வெள்ளைப் புலி, உடல்நல பாதிப்பால் உயிரிழந்தது. செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த, வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,000-க்கும் அதிகமான விலங்குகளும், பறவைகளும் உள்ளன. அவற்றை கண்காணிப்பு கேமரா மூலம் 24 மணி நேரமும் பூங்கா ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர். 13 வயதான பெண் வெள்ளைப்புலி ஒன்று கடந்த 2 வாரங்களுக்கு முன்பு உடல் சோர்வுடன் இருந்ததை அறிந்த கால்நடை மருத்துவர்கள் உடனடியாக பரிசோதனை மேற்கொண்டனர். அட்டாக்ஸியா நோயால் வெள்ளைப்புலி பாதிக்கப்பட்டு இருந்ததை அறிந்த மருத்துவர்கள், உரிய சிகிக்சை அளித்து கண்காணித்து வந்தனர். நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்த வெள்ளைப்புலி கடந்த 2 நாட்களாக எந்தவித உணவையும் எடுத்துக்கொள்ள முடியாமல் மிகவும் சோர்வாக காணப்பட்டது. பல்வேறு மருத்துவ சிகிக்சை அளித்தும் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் அந்த வெள்ளைப்புலி நேற்று இரவு உயிரிழந்தது. உயிரிழந்த வெள்ளைப்புலியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.         …

The post வண்டலூர் உயிரியல் பூங்காவில்13 வயது பெண் வெள்ளைப்புலி அட்டாக்ஸியா நோய் பாதிப்பால் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: