ரோஜாப்பூ ரோஜாப்பூ தான் நாளைக்கு மல்லிகையாக மாறாது: பாஜ எம்எல்ஏ பேச்சுக்கு நிதி அமைச்சர் பதிலடி

சென்னை: சட்டப்பேரவையில் பாஜ உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசும்போது, ‘‘இதுவரை மத்திய அரசு என்று அழைத்துவிட்டு சமீப காலமாக தமிழகத்தில் ஒன்றிய அரசு ஒன்றிய அரசு என்று அழைப்பதை பார்க்கிறோம். மத்திய அரசை ஒன்றிய அரசு என்று சொல்கிறார்கள். இப்படி சொல்வதால் மத்திய அரசின் புகழை மறைத்து விட முடியாது. 19ம் நூற்றாண்டு பெண் கவிஞர் ஒருவர் எழுதிய ஆங்கில கவிதையில் \”ரோஸ் இஸ் ரோஸ் என்ற வரி வரும். ரோஜாவை எந்த பெயரிட்டு அழைத்தாலும் அதனுடைய வாசனையை யாராலும் மாற்ற முடியாது. மத்திய அரசாங்கத்தை நீங்கள் எந்த பெயரிட்டு அழைத்தாலும் அரசியல் அமைப்பு சட்டத்தின்படி மத்திய அரசுக்கு இருக்கும் உரிமைகளை அதிகரிக்கவும் முடியாது, குறைத்து கொடுக்கவும் முடியாது.நிதி அமைச்சர்: ரோஸ், ரோஸ் என்பது உண்மைதான். யாராவது சொல்வாங்களா, ரோஜாப்பூ நாளைக்கு மல்லிகையாகிடும் என்று. ரோஜாப்பூ என்றால் ரோஜாப்பூ தான். நான் கேட்கும் கேள்வி, ஒன்றிய அரசாங்கத்தினுடைய வரி அதிகாரத்தை எதிர்த்தோ, குறை சொல்லி பேசுவதிலோ நாங்கள் முதல் ஆட்கள் இல்லை. வானதி: ஒன்றிய அரசு தமிழக அரசுக்கு ஒவ்வொரு வருடமும் அதிக நிதியை தந்திருக்கிறது. பி.டி.ஆர்.: ரொக்கத்தொகையை ஒப்பிட்டு பேசுவது சரியாகாது. உற்பத்தியில், வரவு-செலவில் உள்ள சதவீதத்தை பேசுங்கள் என்றார். …

The post ரோஜாப்பூ ரோஜாப்பூ தான் நாளைக்கு மல்லிகையாக மாறாது: பாஜ எம்எல்ஏ பேச்சுக்கு நிதி அமைச்சர் பதிலடி appeared first on Dinakaran.

Related Stories: