ரஷிய உற்பத்திகளுக்கு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் தடை எதிரொலி : ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை 10% உயர்வு…

மாஸ்கோ : ரஷிய உற்பத்திகளுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளதால் ஆசிய பங்குச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை 10% அதிகரித்துள்ளது. இதனால் உலக நாடுகள் கவலை அடைந்துள்ளன. உக்ரைன், ரஷியா இடையிலான போர் காரணமாக கடந்த வாரம் கச்சா எண்ணெய் விலை மிகப்பெரிய உயர்வை சந்தித்தது. இந்த நிலையில் ரஷியா உற்பத்திகளுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடை விதிப்பு மற்றும் ஈரான் நாட்டு உடனான மேற்கத்திய நாடுகளின் அணுசக்தி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை தாமதமாகிய காரணங்களால் கச்சா எண்ணெய் விலை மேலும் 10% வரை உயர்ந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் பிரண்ட் கச்சா எண்ணெய்யின் விலை 1 பேரலுக்கு சுமார் 13 டாலர் அதிகரித்து, 131 டாலருக்கு வர்த்தகமாகிறது. இதே போன்று அமெரிக்கா கச்சா எண்ணெய் விலை 125 டாலராக உயர்ந்துள்ளது. உக்ரைன் மீதான தொடர் தாக்குதலை கண்டித்து ரசியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை உலக நாடுகள் பெரிய அளவில் குறைத்துள்ளன. இதனால் கச்சா எண்ணெய்க்கு அதிகப்படியான தட்டுப்பாடு உருவாகி உருவாகி விலை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் உக்ரைன் – ரஷியா போரால் கச்சா எண்ணெய் விலை இந்த வாரம் இதற்கு முன்னர் இல்லாத வகையில் 150 டாலர் வரை உயரக்கூடும் என்று வர்த்தக நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. …

The post ரஷிய உற்பத்திகளுக்கு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் தடை எதிரொலி : ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை 10% உயர்வு… appeared first on Dinakaran.

Related Stories: