சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து சவரன் ரூ.54,560-க்கு விற்பனை

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவனுக்கு ரூ.480 உயர்ந்து சவரன் ரூ.54,560-க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ. 6820க்கு விற்கப்படுகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு தங்கம் விலை கடுமையாக குறைந்தது. ஆனால் கடந்த அக்டோபரில் இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் தொடங்கிய பின்னர் தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கியது.

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம், இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம். இன்றைய தங்கம் விலையை சென்னை மற்றும் பிற நகரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவான வித்தியாசம் மட்டுமே உள்ளது.

கடந்த ஏப்.19-ம் தேதி ரூ.55,120 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது. அதன் பின்னர் ரூ.55,000ஐ ஒட்டி ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னை ஆபரணத் தங்கத்தின் விலை சவனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 6820-க்கும், சவரன் ரூ.54,560-க்கும் விற்பனை ஆகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.99.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து சவரன் ரூ.54,560-க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: