ரஷியா நடத்திய தாக்குதலில் உக்ரைனில் 7 பேர் பலி.. உக்ரைன் ராணுவ வீரர்கள் தங்களிடம் சரணடைந்து வருவதாக அதிபர் புதின் அறிவிப்பு!!

உக்ரைன் : உக்ரைன் மீது முப்படைகளின் தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்தியுள்ளது.கருங்கடல் பகுதியில் போர்க்கப்பல்கள், நீர் மூழ்கி கப்பல்கள் மூலம் ஏவுகணைகளை வீசியும் ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனின் மேற்கு எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த ரஷிய ராணுவமும் பீரங்கிகள், டாங்குகளுடன் தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனில் நுழைந்து ரஷிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். லுகான்ஸ்க், கார்கில், செர்னிஹிவ்வில் நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த 9 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மக்களை தாக்கவில்லை எனக்கூறிய நிலையில் குடியிருப்பு பகுதிக்குள் ரஷியா குண்டு மழையை பொழிந்தது. இதனிடையே உக்ரைன் ராணுவம் உடனடியாக சரணடைய வேண்டும் என்று ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்தது இருந்தார்.உக்ரைன் ராணுவத்தினர் தங்களது ஆயுதங்கள், போர்த் தளவாடங்களை கைவிட்டு சரண் அடையுமாறும் புதின் அறிவுறுத்தி இருந்தார். இந்த நிலையில், உக்ரைனில் உள்ள வான் பாதுகாப்பு அரணை கைப்பற்றிவிட்டதாக ரஷியா அறிவித்துள்ளது.மேலும் உக்ரைன் நாட்டு ராணுவ வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரண் அடைந்து வருவதாகவும் தரை வழி மற்றும் வான்வழி தாக்குதலை தொடர்ந்து உக்ரைன் வீரர்கள் சரணடைவதாகவும் ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

The post ரஷியா நடத்திய தாக்குதலில் உக்ரைனில் 7 பேர் பலி.. உக்ரைன் ராணுவ வீரர்கள் தங்களிடம் சரணடைந்து வருவதாக அதிபர் புதின் அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: