முருகனுக்கு முதல்வர் வாழ்த்து தமிழக வளர்ச்சிக்கு கை கொடுங்கள்

சென்னை: புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட ஒன்றிய அமைச்சர் எல்.முருகனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஒன்றிய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை மற்றும் தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சராக புதிதாக  பொறுப்பேற்றுக் கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல்.முருகனுக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்தார்.   அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படும் வகையில் உங்களது பணி அமைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன், தன்னுடைய முழு ஒத்துழைப்பையும் நல்குவதாக தெரிவித்தார். இதேபோன்று, ஒன்றிய அமைச்சர் எல்.முருகனுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்….

The post முருகனுக்கு முதல்வர் வாழ்த்து தமிழக வளர்ச்சிக்கு கை கொடுங்கள் appeared first on Dinakaran.

Related Stories: