முத்துப்பேட்டை அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் இருக்கைளை வர்ணம் பூசி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைப்பு

 

முத்துப்பேட்டை, அக. 8: முத்துப்பேட்டை அடுத்த எடையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பழுதடைந்த இருக்கைகளை முன்னாள் மாணவர்கள் புதுப்பித்து வழங்கினர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த எடையூர் அரசு மேல்நிலை பள்ளியில் 280க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியில் இருக்கைகள் துருப்பிடித்து இருந்தது. இதை பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் நாகராஜன் தலைவர் சண்முகம் கௌரவத்தலைவர் வீரையன், முன்னாள் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் நல்லாசிரியர் மணி ஆகியோர் இணைய தளம் வழியாக பள்ளி தேவை குறித்து தெரிவித்தனர்.

இதையறிந்த சிங்கப்பூரில் இருக்கும் முன்னாள் மாணவர்கள் அய்யப்பன், மருது பாண்டியன், சிவகுருநாதன், அசோக் விக்னேஷ் ஆகியோர் இணைந்து சரி செய்து கொடுக்க முடிவு செய்தவர். அவர்கள் வழங்கிய சொந்த நிதியில் இருந்து இருக்கை, மேஜைகளுக்கு ரூ.14 ஆயிரம் மதிப்பில் வர்ணம் பூசப்பட்டது.

பள்ளி தலைமை ஆசிரியர் அமுதராசு, உதவி தலைமை ஆசிரியர் பாக்யராஜ், ஆசிரியர்கள் ஐயப்பன், சுருளி ஆண்டவர், ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு ரூ 21,000 மதிப்பில் இருக்கை மேஜைகளுக்கு வர்ணம் பூசப்பட்டு பள்ளியில் ஒப்படைக்கப்பட்டது. இப்பள்ளியில் சிறப்பாக செயல்பட்டு வரும் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்களையும் உதவி செய்த முன்னாள் மாணவர்களையும் தற்போது படிக்கும் மாணவர்கள் பெற்றோர்கள் வெகுவாக பாராட்டினர்.

The post முத்துப்பேட்டை அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் இருக்கைளை வர்ணம் பூசி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Related Stories: