மின்வாரிய ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு

சென்னை: மின்வாரியத்தில் பணியாற்றுவோருக்கான ஓய்வுபெறும் வயது 59ல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.   இதுகுறித்து பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: அரசாணையின் அடிப்படையில் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் ஓய்வுபெறும் வயதை 58ல் இருந்து 59ஆக உயர்த்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 59ல் இருந்து 60  வயதாக உயர்த்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. மேலும் இந்த உத்தரவுகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், சட்ட மற்றும் அரசியலமைப்பு அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள்  போன்றவைகளின் ஊழியர்களுக்கு ெபாருந்தும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக மின்வாரியம் இதை கவனமாக பரிசீலித்த பின்னர், அரசாங்கத்தின் இந்த உத்தரவுகளை மின்வாரியத்தில் ஏற்க முடிவு செய்துள்ளது. அதன்படி தமிழக மின்வாரியத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் ஓய்வு வயது 59ல்  இருந்து 60 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும் என இதன் மூலம் உத்தரவிடப்படுகிறது. பணியில் உள்ள அனைவருக்கும் மற்றும் 31.5.2021 முதல் ஓய்வு பெறுவோருக்கும் இது பொருந்தும்….

The post மின்வாரிய ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: