சென்னை : சென்னையில் இன்று தங்கம் விலை 360 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. சென்ற மாதம் முழுவதும் தங்கம் விலை உச்சத்திலேயே இருந்தது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு முதல் வாரத்தில் தங்கம் விலை கணிசமான அளவில் குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 குறைந்தது. அதே போல் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து, ரூ.35,040-க்கு விற்பனையானது. இன்றும் நல்ல செய்தியாக தங்கம் விலை குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்று பார்க்கலாம்...