முப்பெரும் விழாவில் பங்கேற்க சரத்பவார், யஷ்வந்த்துக்கு வைகோ அழைப்பு

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர்கள் சரத்பவார், யஷ்வந்த் சின்கா ஆகியோரை வைகோ நேற்று சந்தித்து முப்பெரும் விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.  மதிமுக சார்பில் செப்டம்பர் 15ம் தேதி முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிலையில், நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும், மராட்டிய மாநில முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத்பவார், முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான யஷ்வந்த் சின்கா ஆகியோரை அவர்களது இல்லத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்தார்.

அப்போது, செப்டம்பர் 15 ஈரோட்டில் நடைபெற இருக்கும் மதிமுக முப்பெரும் விழா மாநில மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். அப்போது, அவர்கள் வருவதாகக் கூறி வைகோவிடம் ஒப்புதல் தந்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது மத்தியிலும், மாநிலத்திலும் நிலவி வரும் அரசியல் சூழ்நிலை குறித்து வைகோ பேசியதாக தெரிகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: