மதுரை மாவட்டத்தில் பணியாற்றிவரும் கூட்டுறவுத்துறை சார்நிலை அலுவலர்களுக்கான புத்தாக்கப்பயிற்சி

மதுரை, பிப். 7: மதுரை மாவட்டத்தில் பணியாற்றிவரும் கூட்டுறவுத்துறை சார்நிலை அலுவலர்களுக்கான புத்தாக்கப்பயிற்சி மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அழகப்பன் அரங்கத்தில் நடைபெற்றது. 2 நாட்கள் நடந்த இப்பயிற்சிக்கு மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி தலைமை வகித்து துவக்கி வைத்து பயிற்சி அளித்தார். மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர், செயலாட்சியர் மரு.ஜீவா, மதுரை சரக துணைப்பதிவாளர் பாபு, துணைப்பதிவாளர், முதல்வர் பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் வசந்தி, பயிற்சி துணைப்பதிவாளர் விநாசாந்தினி ஆகியோர் முன்னிலை வகித்து பயிற்சி அளித்தனர்.

பயிற்சியில் மதுரை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாட்சியர் தீனதயாளன் வரவேற்புரை நிகழ்த்தினார். இப்பயிற்சியில் சட்டங்கள், பொது விநியோகத்திட்ட பணிகள் தொடர்பாகவும், யோகா, தியானப்பயிற்சி அளித்தல், கூட்டுறவு விற்பனைச்சங்கங்கள் வளர்ச்சிப்பணி, கூட்டுறவு சேவை மற்றும் விதிகள் தொடர்பாகவும், பொது சேவை மையம் தொடர்பாகவும், தகவல் உரிமைச்சட்டம் மற்றும் தொழிலாளர் சட்டம், அலு வலகத்தில் தமிழ் எழுத்து பயன்படுத்தல் பற்றியும் பயிற்சி மற்றும் நிதி மற்றும் வங்கியியல், அரசின் சிறப்பு திட்டங்களை நடைமுறைடுத்துதல் கூட்டுறவுத்துறை அலுவலர்களை ஊக்குவித்தல் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் கூட்டுறவு சார்பதிவாளர்கள், முதுநிலை ஆய்வாளர்கள், இளநிலை ஆய்வாளர்கள் உள்பட மொத்தம் 102 பேர் கலந்து கொண்டனர்.

The post மதுரை மாவட்டத்தில் பணியாற்றிவரும் கூட்டுறவுத்துறை சார்நிலை அலுவலர்களுக்கான புத்தாக்கப்பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: