மதுரையில் டான்பெட் கண்காட்சி அரங்கை பார்வையிட்ட கூடுதல் பதிவாளர்

 

மதுரை, ஆக. 27: மதுரை மாவட்டத்தில் ஐடா ஸ்கட்டர் அரங்கில் கடந்த 25.08.2023ல் துவங்கப்பட்ட விவசாய கண்காட்சியில் மதுரை மாவட்ட டான்பெட்டின் அலகின் கண்காட்சி அரங்கை கூடுதல் பதிவாளர் (நிதி மற்றும் வங்கியியல்) மரு.ந.வில்வசேகரன் பார்வையிட்டார்.

மதுரை மண்டல இணைப்பதிவாளர் சி.குருமூர்த்தி, தேனி மண்டல இணைப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமார், திண்டுக்கல் மண்டல இணைப்பதிவாளர் காந்திராஜா, மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர்/ செயலாட்சியர் மரு.அ.ஜீவா, மதுரை மற்றும் தேனி மாவட்ட துணைப்பதிவாளர்கள், துறை அலுவலர்கள், டான்பெட் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

மதுரை மாவட்ட டான்பெட்டின் துணைப்பதிவாளர்/ மண்டல மேலாளர் .ச.பார்த்திபன் கண்காட்சி அரங்கில் உள்ள டான்பெட்டின் தயாரிப்புகள் பற்றி விளக்கமளித்தார். மேலும், இக்கண்காட்சி ஆகஸ்ட் 28ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படுவதால் பொதுமக்களும், விவசாயிகளும் கண்காட்சியை பார்வையிட்டு பயன்பெறலாம்.

The post மதுரையில் டான்பெட் கண்காட்சி அரங்கை பார்வையிட்ட கூடுதல் பதிவாளர் appeared first on Dinakaran.

Related Stories: