மக்கள் நடமாட்டம் இல்லாததால் ராட்சத வலையை உருவாக்கிய சிலந்திகள்: ஆண்டு தோறும் வனத்தை ஒட்டிய பகுதிகளில் ஊரடங்கை பிறப்பிக்க இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை

கொடைக்கான: கொடைக்கானல் அருகே சிலந்திகள் உருவாக்கியுள்ள பிரமாண்டமான வலை இயற்கை ஆர்வலர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் இயற்கை அழகிற்கு  எப்போதும் பஞ்சம் இல்லை. ஊரடங்கு காரணமாக ஆள் அரவமின்றி வெறிசோடியுள்ள சுற்றுலாதளங்களில் மாசு குறைவதால் இயற்கை புதுப்பொலிவை பெற்று வருகிறது. வன விலங்குகள் உற்சாகத்தோடு வளம் வருவது மட்டுமின்றி, பூச்சிகளும் தங்கள் வலைகளை பின்னுவதில் மும்மரம் காட்ட்டி வருகின்றன. ஓட்டம்சத்திரம் சிலிம் வழியில் அமைந்துள்ள குப்பமாள்பட்டி கிராமத்தில் உள்ள இரண்டு மரங்களில் சிலந்திகள் ராட்சத வலைகளை பின்னியுள்ள. பல வகையான சிலந்தி பூச்சிகள் உள்ள கொடைக்கானலில் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இனவிருத்திக்காக ராட்சத வலையை அவை உருமாகியுள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஆப்ரிக்க நாடுகளில் இத்தகைய சிலந்திகள் காணப்படும் என தெரிவித்த இயற்க்கை ஆர்வலர்கள் ஊரடங்கு காரணமாகவே தமிழகத்தில் இது சாத்தியமானதாக கூறியுள்ளனர். ஊரடங்கின் பலனாக இயற்க்கை தன்னுடைய பாதைக்கு மீண்டும் திரும்ம்புவதாக கூறிய அவர்கள், ஆண்டுதோறும் வண்ணாத்தி ஒட்டிய பகுதிகளில் ஊரடங்கி பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தினார். …

The post மக்கள் நடமாட்டம் இல்லாததால் ராட்சத வலையை உருவாக்கிய சிலந்திகள்: ஆண்டு தோறும் வனத்தை ஒட்டிய பகுதிகளில் ஊரடங்கை பிறப்பிக்க இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: