போதை மருந்து கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: போதை மருந்து கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அவர்நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அரியலூர்ஜெயங்கொண்டம் அருகே காசாங்கோட்டை கிராமத்தில் இரு வகுப்பினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அருண்குமார் உள்பட சிலர் மீது தீண்டாமை மற்றும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 25.11.2022 அன்று அருண்குமார் உள்பட வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய அருண்குமார் வீட்டிற்கு காவல் துறையினர் சென்றுள்ளனர். அங்கு அவர் இல்லாததால், 53 வயதான செம்புலிங்கம் உள்பட இருவரை பிடித்து கடுமையாக தாக்கியதாகவும், பலத்த காயமடைந்த செம்புலிங்கமும், மற்றொருவரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய செம்புலிங்கம், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி டிசம்பர் 8ம் தேதி இரவு மரணமடைந்து விட்டார். தவறு இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தக்க தண்டனை பெற்றுத்தர வேண்டும்.கடந்த 12ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில், மண்டபம் என்ற இடத்தில் சுமார் ரூ.160 கோடி மதிப்பிலான கஞ்சா ஆயில், கிறிஸ்டல் மெத்தம்பெட்டமைன் என்ற போதை பொருட்களை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். சென்னையில் இருந்து இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக, இந்த போதை பொருட்களை கடத்தி வந்த சென்னை கொடுங்கையூரை சேர்ந்த பால்ராஜ் மற்றும் தனசேகர் ஆகிய இரண்டு பேரை மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் கைது செய்துள்ளனர். போதை மருந்து கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

The post போதை மருந்து கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: