பேரூராட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து பிரதமர் மோடி படம் மாட்டிய பாஜ நிர்வாகி கைது

கோவை: கோவை அருகே பேரூராட்சி அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து பிரதமர் மோடி படத்தை மாட்டிய பாஜ நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். கோவை அடுத்துள்ள பூலுவப்பட்டி பேரூராட்சி அலுவலகத்திற்குள் கடந்த 22ம் தேதி புகுந்த பாஜ அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையிலான பாஜவினர், அலுவலகத்திற்குள் பிரதமர் மோடியின் படத்தை மாட்டினர். இதனைப்பார்த்த பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் அனுமதியின்றி அலுவலகத்திற்கு வந்து புகைப்படம் மாட்டுவது தவறு எனவும், முக கவசம் அணியாமல் அலுவலகத்திற்குள் வரக்கூடாது எனவும் சுட்டிக்காட்டினர். இதனால், இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.  இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பான புகாரின்பேரில், ஆலாந்துறை போலீசார் பாஜ நிர்வாகி பாஸ்கரனை கைது செய்தனர். மேலும், பாஜவினர் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் மீது அத்துமீறி நுழைதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் கைது செய்யப்பட்ட பாஸ்கரன், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்….

The post பேரூராட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து பிரதமர் மோடி படம் மாட்டிய பாஜ நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Related Stories: