கச்சா எண்ணெய் விலை உயர்ந்தும் ரப்பர் விலை அதிகரிக்கவில்லை: விவசாயிகள் கவலை

நாகர்கோவில்: சர்வதேச அளவில் தேவை அதிகரித்தும் ரப்பர் விலை உயராது இருப்பது விவசாயிகளை கவலை அடையச் செய்துள்ளது. தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளிலும்,கேரளாவிலும் பெருமளவு ரப்பர் சாகுபடி செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உயர்ந்த நிலையிலும் ரப்பர் விலையில் சிறிய அளவில் மட்டுமே மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதே வேளையில் இந்திய ரப்பர் சந்தையில் அந்த அளவுக்கு விலையேற்றம் இருக்க வாய்ப்பு இல்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக சிந்தடிக் ரப்பர் உற்பத்திக்கு கச்சா எண்ணெயின் தேவை உள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் சிந்தடிக் ரப்பர் விலை உயருவதுடன் இயற்கை ரப்பர் தேவையையும் அதிகரிக்க செய்யும். இதன் காரணமாக இயற்கை ரப்பர் விலை உயருவது வாடிக்கை.

 கச்சா எண்ணெய் விலை தற்போது 75 டாலராக உள்ளது. இது ரப்பர் விலையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. சர்வதேச சந்தையில் ரப்பர் கிலோவுக்கு 57 காசுகள் மட்டும் விலை உயர்ந்து கிலோ ₹116.38 ஆக இருந்தது. கோட்டயம் மார்க்கெட்டில் ஆர்எஸ்எஸ் 4 கிரேடு ரப்பர் விலை ₹119 ஆகவும், ஆர்எஸ்எஸ் 5 கிரேடு ரூ.117 ஆகவும் இருந்தது. சர்வதேச அளவில் கடந்த ஆண்டு ரப்பர் உற்பத்தி 3 சதவீதம் ஒட்டுமொத்தமாக அதிகரித்துள்ளது. இதில் 30 சதவீதம் ரப்பரை சீனா பயன்படுத்துகிறது. சீனாவில் வாகன உற்பத்தி தொழில் வளர்ச்சியே இதற்கு காரணம் ஆகும். சர்வதேச சந்தையில் ரப்பர் விலையில் பெருமளவு மாற்றம் ஏற்படாததால் கோட்டயம் மார்க்கெட்டில் ரப்பர் விலை இப்போதைக்கு உயர வாய்ப்பு இல்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சீசன் முடிந்தபோதும் ரப்பர் தேவை அதிகரிக்க வேண்டிய நிலையில் பெரிய நிறுவனங்கள் ரப்பரை இறக்குமதி செய்து இருப்பு வைத்துள்ளதும், அவர்கள் ரப்பர் வாங்க வேண்டிய தேவை எழவில்லை.

இதுவும் ரப்பர் விலை உயராமல் இருப்பதற்கு காரணமாக கருதப்படுகிறது.பெரிய நிறுவனங்கள் ரப்பரை இறக்குமதி செய்து இருப்பு

வைத்துள்ளனர். இதனால் தேவை குறைந்ததால், ரப்பர் விலை அதிகரிக்கவில்லை.

Related Stories: