டெல்லி: ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு கூகுள் மற்றும் யூ-டியூப் மிகச் சிறந்த ஆசிரியர்கள் என குடிமைப்பணி தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த அனுதீப் துரிசெட்டி தெரிவித்துள்ளார். தேசிய அளவில் முதலிடம் பிடித்தது குறித்து கருத்து தெரிவித்த அனுதீப் துரிசெட்டி ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு படிப்பதற்காக நான் எந்த ஒரு பயிற்சி மையத்திலும் சேரவில்லை, ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தேவையான அனைத்து விவரங்களும் ஆன்லைனில் கிடைப்பதாக தெரிவித்த அனுதீப் துரிசெட்டி நான் பல மணி நேரம் இணைதளத்திலேயே செலவிட்டதாகவும் கூறியுள்ளார்.