புதுவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்

புதுச்சேரி, பிப். 13: புதுவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என கவர்னர் தமிழிசை நேற்று தகவல் தெரிவித்துள்ளார். புதுச்சேரி ஜிப்மர் சர்வதேச பொது சுகாதார கல்வி மையத்தில் பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தகத்தை கவர்னர் தமிழிசை நேற்று தொடங்கி வைத்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுகையில், ஜிப்மரில் எல்லோரும் சிறப்பாக பணியாற்றுகிறார்கள். மக்களுக்கான சிகிச்சை கிடைத்து கொண்டிருக்கிறது. ஜிப்மர் சேவையில் ஏதாவது குறைபாடு இருந்தால் என்னிடம் தெரிவித்தால் நேரடியாக இயக்குநரிடம் பேசி சரி செய்வேன். புதுவையில் யாருக்கும் எந்த மருத்துவ சிகிச்சையும் புறக்கணிக்கப்படாது.

குரங்கு காய்ச்சல் பற்றி புதுவையில் பிரச்னை இல்லை. இக்காய்ச்சலுக்கான அறிகுறி தோன்றினால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வோம். அனைத்து மருத்துவமனையிலும் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் வித்தியாசமான காய்ச்சல் வந்தால் உடனே அறிவுறுத்தும்படி அரசு தெரிவித்துள்ளது. எனவே, மருத்துவர்கள் எச்சரிக்கையோடு இருக்கிறார்கள். அவசர காலத்தில் மக்களுக்கு எல்லா உதவிகளும் கிடைக்க வேண்டும் என பணியாற்றி கொண்டிருக்கிறோம். கொரோனா காலத்தில் இருந்ததைவிட தற்போது உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தி இருக்கிறோம். தமிழக அரசு உரையை ஆளுநர் பாதியில் நிறுத்திவிட்டு சென்ற விவகாரத்தில் கருத்து கூற விரும்பவில்லை.

நான் கவர்னர் பதவியை ராஜினாமா செய்யப்போதுவாக வெளியாகும் தகவல் வதந்திதான். பிரச்னை வந்தால் தமிழிசை காரணம், நல்லது நடந்தால் ஆளுநருக்கு அதற்கும் சம்பந்தம் கிடையாது என்ற போக்கு உள்ளது. பாஜ வேட்பாளர் தேர்வு செய்வதில் தாமதம் ஏற்படுவதற்கு நான் காரணம் கிடையாது. அதற்கும் எனக்கும் சம்மந்தம் கிடையாது. என்னை பற்றி வெளியாகும் தகவல் வதந்திதான். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு இடைக்கால படஜெட் தாக்கல் செய்வதுதான் முறை. தெலங்கானாவிலும் இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்துள்ளார்கள். புதுவையிலும் இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்ய போகிறார். 14 ஆண்டுகளாக முழு பட்ஜெட் போடவில்லை.

கடந்தாண்டு தான் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இப்போது இடைக்கால பட்ஜெட் செய்தல் செய்வது நடைமுறை. இது தவறு கிடையாது. தெலங்கானாவில் நான் யாருடனும் சண்டை போடுவதில்லை. அவர்கள் என்னுடன் சண்டை போட்டால் நான் அதற்கு பொறுப்பில்லை. கட்அவுட் பேனர் தடை விவகாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் எல்லோரும் அமர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும். நான் ஆளுநாராக தொடர்வேனா?, தேர்தலில் போட்டியிடுவேனா என்பது சஸ்பென்ஸ் என ஏற்கனவே கூறியிருந்தேன். இந்த சஸ்பென்ஸ்க்கு நிறைய நாட்கள் இருக்கிறது, என்றார்.

The post புதுவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: