இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி, ஜூன் 25: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், மாணவர் பெருமன்றம், இந்திய தேசிய மாதர் சம்மேளனம் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். ஏஐஓஐஎப் மாவட்ட செயலாளர் விஜய், மாநில பொருளாளர் கணேசன், மாதர்சங்கம் மாவட்ட செயலாளர் ரீத்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் தினேஷ் கண்டன உரையாற்றினார். கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கி, உயிரிழந்த குடும்பங்களுக்கு உரிய வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். கள்ளச்சாராயத்தை உற்பத்தி இடமாக கருதப்படும் கல்வராமயன்மலையில் கள்ளச்சாராயத்தை முழுவதுமாக ஒழித்திட வேண்டும், கல்வராயன்மலைவாழ் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி, பொருளாதாரத்தில் உயர்ந்திட தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்டம் முழுவதும் உள்ள கள்ளச்சாராய வியாபாரிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஐ முன்னாள் மாவட்ட செயலாளர் சரவணன், சிபிஐ விழுப்புரம் மாவட்ட செயலாளர் சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து
கொண்டனர்.

The post இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: