இந்தியா புதுச்சேரியில் அமைச்சர் பதவி கேட்டு பாஜக அலுவலகத்தில் குவிந்த எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள்!: கொரோனா விதிமுறைகளை மீறி குவிந்ததால் பரபரப்பு..!! Jun 01, 2021 புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் பாஜக புதுச்சேரி: புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் அமைச்சர் பதவி வழங்கக்கோரி எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் கொரோனா விதிமுறைகளை மீறி சமூக இடைவெளியின்றி குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக தொற்று பரவும் அபாயமும் நேரிட்டுள்ளது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி வென்றாலும் இதுவரை ரங்கசாமி மட்டுமே முதல்வராக பதவியேற்றுள்ளார். இதுவரை அமைச்சரவை பதவியேற்காத நிலையில், கூட்டணிக்குள் அமைச்சர் பதவிகளை பெறுவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில், பாஜக எம்.எல்.ஏக்கள் பலரும் தங்களுக்கு மந்திரி பதவி கேட்டு காய் நகர்த்தி வருகின்றனர். அதில் புதுச்சேரி ஊசுடு தனித்தொகுதி எம்.எல்.ஏ சாய்சரவணகுமாருக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் புதுச்சேரி பாஜக அலுவலகத்திற்கு சென்று மனு அளித்தனர். இதனிடையே பாஜகவிற்கு இரண்டு அமைச்சர்கள் மற்றும் துணை சபாநாயகர் பதவி மட்டுமே தருவதில் முதல்வர் ரங்கசாமி உறுதியாக உள்ளதாகவும், ஆனால் பாஜக சார்பில் 3 அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் பதவி பெறுவதில் குறியாக இருப்பதாகவும் தெரிகிறது. இதனிடையே பாஜக-வினர் பேச்சுவார்த்தைக்கு வந்தால் பேச தயார் என்றும் ஆனால் முதல்வர் ரங்கசாமியை யாரும் சந்திக்கவில்லை என்றும் என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயபால் வாட்ஸ் அப் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார். … The post புதுச்சேரியில் அமைச்சர் பதவி கேட்டு பாஜக அலுவலகத்தில் குவிந்த எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள்!: கொரோனா விதிமுறைகளை மீறி குவிந்ததால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.
சைக்கிளில் சென்ற வாலிபர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற லாரியை காரில் விரட்டிப் பிடித்த நடிகை நவ்யா நாயர்
பணமோசடி தடுப்பு சட்டம் தொடர்பான சீராய்வு மனு மீதான விசாரணை அக்.3க்கு ஒத்திவைப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு
மாதந்தோறும் 300 யூனிட் இலவச மின்சாரம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2000 நிதியுதவி: அரியானா பேரவை தேர்தலையொட்டி காங். வாக்குறுதி
பிரதமரின் 100 நாட்களின் சாதனை வளர்ச்சி அடைந்த நாட்டுக்கான அடித்தளம்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம்
நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து வாக்களித்தனர் காஷ்மீரில் முதல்கட்ட தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது: 59 சதவீத வாக்குகள் பதிவானது
பாஜ தலைவர்களின் கொலை மிரட்டல் பேச்சுகளால் ராகுலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: டெல்லி போலீசில் காங்கிரஸ் புகார்
ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகள் கொழுப்பு: முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டு
சந்திரயான்-4, விண்வெளி மையம் உட்பட பல விண்வெளி திட்டங்களுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்: ரூ.24,000 கோடியில் உர மானியம்