புதுக்கோட்டையில் முடி திருத்தும் நிலையத்தில் சாதி பாகுபாடா?: மாவட்ட ஆட்சியர் பதில் மனு அளிக்க ஐகோர்ட் கிளை ஆணை..!!

மதுரை: புதுக்கோட்டை மாவட்டம் புதுப்பட்டி கிராமத்தில், பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு முடி திருத்துவதில்லை என்ற புகார் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைக்காடு பகுதியை சேர்ந்த செல்வம், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்‍கல் செய்த பொதுநல மனுவில், புதுப்பட்டி கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும், இதில் 150 குடும்பங்கள் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். புதுப்பட்டி கிராமத்தில் கடந்த 15 முதல் 20 ஆண்டுகளாக 3 முடி திருத்தும் நிலையங்களும், ஒரு சலவை நிலையமும் உள்ளதாகவும், ஆனால், இங்கு செயல்படும் முடி திருத்தும் நிலையத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு முடி திருத்தம் செய்வது இல்லை என்று தெரிவித்தார். எனவே, புதுப்பட்டி கிராமத்திலுள்ள முடி திருத்தும் நிலையத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு முடி திருத்துவதில்லை என்ற புகார் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் கொண்ட அமர்வு, அது உண்மையாய் இருப்பின் மிகப்பெரிய பிரச்சனை. குறிப்பிட்ட சமூகத்திற்கு என பிரத்யேகமான முடி திருத்தும் நிலையம் உள்ளதா?. ஏன் இதுபோன்ற பாகுபாடு உள்ளது? என கேள்விகளை எழுப்பினர். இந்த வழக்கு குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு நீதிபதி ஒத்திவைத்தனர்….

The post புதுக்கோட்டையில் முடி திருத்தும் நிலையத்தில் சாதி பாகுபாடா?: மாவட்ட ஆட்சியர் பதில் மனு அளிக்க ஐகோர்ட் கிளை ஆணை..!! appeared first on Dinakaran.

Related Stories: