புகையிலை பொருட்கள் கடத்திய வட மாநில வாலிபர் கைது

 

அந்தியூர்,செப்.1: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதி போலீஸ் செக் போஸ்டில் நேற்று போலீசார் கர்நாடகா பகுதியில் இருந்து வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு கோவை பதிவெண் கொண்ட சொகுசு கார் ஒன்று வந்தது. அதனை போலீஸ் எஸ்ஐக்கள் மினிசாமி, விஜயகுமார் சோதனையிட்டனர்.

சோதனையில் ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தை சேர்ந்த சுஜ்ராம்(25) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களான 15 சாக்கு மூட்டைகளில் ஹான்ஸ் பாக்கெட்டுகளும், 7 மூட்டைகளில் கூலிப் பாக்கெட்டுகளும், 16 மூட்டைகளில் விமல் பாக்கெட்டுகள், 16 முட்டைகளில் வி1 துப்பாக்கு கொண்டு வந்தது தெரிய வந்தது.

மேலும் விசாரணையில் இதனை கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து வாங்கி வந்து கோவையில் விற்பதற்காக எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து ஒரு சொகுசு காரையும், 336 கிலோ புகையிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சுஜ்ராமை கைது செய்த போலீசார் பவானி ஜெஎம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post புகையிலை பொருட்கள் கடத்திய வட மாநில வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: