ஈரோடு, செப்.14: ஈரோடு சோலாரில் நடைபெற்று வரும் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை மாநகராட்சி ஆணையர் மனிஷ் நேற்று ஆய்வு செய்தார். ஈரோடு மாநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சோலாரில் மாநகராட்சிக்கு சொந்தமான 19.69 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடனான புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ரூ.63.50 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் இக்கட்டுமான பணிகள் தற்போது 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில், கட்டுமான பணிகளை மாநகராட்சி ஆணையர் மனிஷ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, பணிகளின் விவரம் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவன அலுவலர்களிடம் கேட்டறிந்த அவர், பணிகளை தரமாகவும், விரைவாகவும் செய்துமுடிக்க அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.
The post சோலார் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் ஆய்வு appeared first on Dinakaran.