புகைக்குழல் கூடங்கள் தடையை மீறினால் 3 ஆண்டு சிறை: சட்டசபையில் சட்ட முன்வடிவை அறிமுகம் செய்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்ட முன்வடிவை அறிமுகம் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: 2003ம் ஆண்டு சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலை தயாரிப்புகள் (விளம்பரம் செய்தலை தடை செய்தல், வணிகம் மற்றும் வாணிபம், உற்பத்தி செய்தல், வழங்குதல் மற்றும் விநியோகம் செய்தலை முறைப்படுத்துதல்) சட்டமானது (மைய சட்டம் 34/2003) சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலை தயாரிப்புகளின் வணிகம் மற்றும் வாணிபம் மற்றும் உற்பத்தி வழங்குகை மற்றும் விநியோகம் ஆகியவற்றை ஒழுங்குமுறைபடுத்துவதற்கு வகை செய்கிறது.சென்னை மாநகரில், புகைக்குழல் கூடங்கள் அதிகளவில் திடீரென பெருகி உடல் நலத்திற்கு கொடிய சீர்கேட்டினை ஏற்டுத்தி வருவதாகவும், பல உணவகங்கள் புகைபிடிக்கும் பகுதிகள்-இடங்களில் சேவையினை வழங்குகின்றதொரு போலி தலைப்பின் கீழ் புகைக்குழல் நுகர்தலை அனுமதித்து வருவதாகவும், தற்போது மாநிலத்தில் புகைக்குழல் கூடத்தினை ஒழுங்குபடுத்துகின்ற சட்டம் எதுவும் இல்லையென அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, அரசானது 2003ம் ஆண்டு சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலை தயாரிப்புகள் சட்டத்தை தமிழ்நாடு மாநிலத்திற்கு பொருந்தும் வகையில் தக்கவாறு திருத்தம் செய்வதன் மூலம், புகைக்குழல் கூடத்தினை தடை செய்வதெனவும், அதனை மீறினால் 3 ஆண்டுகள் வரை சிறைதண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தண்டனை வழங்கவும் முடிவு செய்துள்ளது. இந்த சட்ட முடிவானது மேற்கூறிய முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது….

The post புகைக்குழல் கூடங்கள் தடையை மீறினால் 3 ஆண்டு சிறை: சட்டசபையில் சட்ட முன்வடிவை அறிமுகம் செய்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Related Stories: