பாலக்காடு பகவதி அம்மன் கோயில் தாலப்பொலி திருவிழா: 15 யானைகளுடன் பஞ்சவாத்தியம்

பாலக்காடு: பாலக்காடு அருகே எளவாதுக்கல் பகவதி அம்மன் கோயில் தாலப்பொலி திருவிழா வெகுவிமர்சையாக நேற்று நடந்தது. கேரள மாநிலம் பாலக்காடு திருத்தாலா அருகே எளவாதுக்கல் பகவதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் தாலப்பொலி திருவிழா வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்றது. கோயில் வளாக மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் 15 யானைகளுடன் பஞ்சவாத்தியம் முழங்க உலா வந்த அம்மனை தரிசனம் செய்தனர். அம்மன் ஊர்வலத்தில் கேரளாவின் பாரம்பரியமான கலைஞர்களின் நாட்டியங்கள், பூக்காவடி, தையம், குதிரை, காளை உருவப்பொம்மைகள் ஆகியவை இடம் பெற்றிருந்தன. மேலும் தவில், சிங்காரி மேளம், நைய்யாண்டிமேளம், செண்டை, பஞ்சவாத்தியங்கள் என ஒன்றன்பின் ஒன்றாக ஊர்வலத்தில் வந்த காட்சியை மக்கள் சாலையில் இருபுறமும் நின்று கண்டுகழித்து மகிழ்ச்சியடைந்தனர். தந்திரி நாராயணன் நம்பூதிரிபாட் தலைமையில் அம்மனுக்கு விஷேச பூஜைகள் நடைபெற்றன….

The post பாலக்காடு பகவதி அம்மன் கோயில் தாலப்பொலி திருவிழா: 15 யானைகளுடன் பஞ்சவாத்தியம் appeared first on Dinakaran.

Related Stories: