இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 : இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

கார்டிப்: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்தியாவை பேட்டிங் செய்யுமாறு அழைத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களை எடுத்துள்ளது. இதனையடுத்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் 149 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றுள்ளது. இதனால் இந்த தொடரில் 1-1என்ற கணக்கில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: